Karththar Mael Nambikkai

கர்த்தர் மேல் நம்பிக்கை

Artist: Joseph Aldrin | Albums:



Lyrics in English

Karththar Mael Nambikkai
Vaikkum Manushan Naan
Kartharai Nampikkaiyaai Konda
Manushan Naan -- (2)

Karthar Mael Baarathai Vaithu Vittaen
Avarae Ennai Aadharipaar
Kartharaiyae Naan Nambiduvaen
Orupothum Thallada Vida Mattar -- (2)

1. Ushnam Varuvadhai Paraamal
En Ilaigal Pachayai Irukkum
Malai Thaalchiyaana Varushangalilum
Varuthamindri Kani Kodukkum -- (2)
En Vaergal Thanneerukkul
En Nambikkai Yesuvin Mael -- (2)

Karththar Mael Nambikkai
Vaikkum Manushan Naan
Kartharai Nampikkaiyaai Konda
Manushan Naan

2. Neerkaalgal Oram Nadapattu
En Kaalathil Kaniyai Koduppaen
Ilaiyudhiraa Maram Pol Iruppaen
Naan Seivadhellaam Vaaikka Seiveer -- (2)
Um Vedhathil Piriyam Kondu
Athai Raappagal Dhyanipathal -- (2)

Karththar Mael Nambikkai
Vaikkum Manushan Naan
Kartharai Nampikkaiyaai Konda
Manushan Naan

3. Uyirodu Vaalum Naatkalellam
Ennai Oruvanum Edhirppadhillai
En Valiyai Vaaikka Seithiduvaen
Puthimaanaai Nadandhu Kolvaen -- (2)
En Vaaivittu Pirivadhillai
Adhai Dhayaanikka Marappadhillai -- (2)

Karththar Mael Nambikkai
Vaikkum Manushan Naan
Kartharai Nampikkaiyaai Konda
Manushan Naan -- (2)

Karthar Mael Baarathai Vaithu Vittaen
Avarae Ennai Aadharipaar
Kartharaiyae Naan Nambiduvaen
Orupothum Thallada Vida Mattar -- (2)


Lyrics in Tamil

கர்த்தர் மேல் நம்பிக்கை
வைக்கும் மனுஷன் நான்
கர்த்தரை நம்பிக்கையாய் கொண்ட
மனுஷன் நான் -- (2)

கர்த்தர் மேல் பாரத்தை வைத்து விட்டேன்
அவரே என்னை ஆதரிப்பார்
கர்த்தரையே நான் நம்பிடுவேன்
ஒருபோதும் தள்ளாட விட மாட்டார் -- (2)

1. உஷ்ணம் வருவதை பாராமல்
என் இலைகள் பச்சையாய் இருக்கும்
மழை தாழ்ச்சியான வருஷங்களிலும்
வருத்தமின்றி கனி கொடுக்கும் -- (2)
என் வேர்கள் தண்ணீருக்குள்
என் நம்பிக்கை இயேசுவின் மேல் -- (2)

கர்த்தர் மேல் நம்பிக்கை
வைக்கும் மனுஷன் நான்
கர்த்தரை நம்பிக்கையாய் கொண்ட
மனுஷன் நான்

2. நீர்க்கால்கள் ஓரம் நடப்பட்டு
என் காலத்தில் கனியைக் கொடுப்பேன்
இலையுதிரா மரம் போல் இருப்பேன்
நான் செய்வதெல்லாம் வாய்க்கச் செய்வீர் -- (2)
உம் வேதத்தில் பிரியம் கொண்டு
அதை இராப்பகல் தியானிப்பதால் -- (2)

கர்த்தர் மேல் நம்பிக்கை
வைக்கும் மனுஷன் நான்
கர்த்தரை நம்பிக்கையாய் கொண்ட
மனுஷன் நான்

3. உயிரோடு வாழும் நாட்களெல்லாம்
என்னை ஒருவனும் எதிர்ப்பதில்லை
என் வழியை வாய்க்கச் செய்திடுவேன்
புத்திமானாய் நடந்து கொள்வேன் -- (2)
என் வாய்விட்டு பிரிவதில்லை
அதை தியானிக்க மறப்பதில்லை -- (2)

கர்த்தர் மேல் நம்பிக்கை
வைக்கும் மனுஷன் நான்
கர்த்தரை நம்பிக்கையாய் கொண்ட
மனுஷன் நான் -- (2)

கர்த்தர் மேல் பாரத்தை வைத்து விட்டேன்
அவரே என்னை ஆதரிப்பார்
கர்த்தரையே நான் நம்பிடுவேன்
ஒருபோதும் தள்ளாட விட மாட்டார் -- (2)



;