Egopithu Serungalen

ஏகோபித்துச் சேருங்களேன்

Artist: | Albums:



Lyrics in English

1. Egopithu serungalen
Karthavil aananthikavum
Visaram vittoyungalen
Kembirith aarathikavum

--Chorus--
Seivom! Seivom!
Thriyegarai thuthi seivom!
Seivom! seivom!
Thriyegarai thuthi seivom!

2. Paraparan meivasthuvam
Dhayabarar aandavare
Vanthaar vaiyakathileyam
Ratchika vallavare -- Seivom

3. Pisasin ubayangalal
Bayangara mosamundam
Aanalum devaviyinal
Othasaiyum jeyamumam -- Seivom

4. Tharithirame yayinum
Santhosham vidathirupom
Ma kalvi illavidinum
Oyamale sthotharipom -- Seivom

5. Egopithu padungalen
Magorsa vaananthathinal
Thriyegarai potrungalen
Gembira sangithathinal -- Seivom


Lyrics in Tamil

1. ஏகோபித்துச் சேருங்களேன்
கர்த்தாவில் ஆனந்திக்கவும்
விசாரம் விட்டோயுங்களேன்
கெம்பீரித் தாராதிக்கவும்

--Chorus--
செய்வோம்! செய்வோம்!
திரியேகரைத் துதிசெய்வோம்!
செய்வோம் ! செய்வோம்!
திரியேகரைத் துதிசெய்வோம்!

2. பராபரன் மெய்வஸ்துவாம்
தயாபரர் ஆண்டவரே
வந்தார் வையகத்திலேயாம்
இரட்சிக்க வல்லவரே -- செய்வோம்

3. பிசாசின் உபாயங்களால்
பயங்கர மோசமுண்டாம்
ஆனாலும் தேவாவியினால்
ஒத்தாசையும் ஜெயமுமாம் -- செய்வோம்

4. தரித்திரமே யாயினும்
சந்தோஷம் விடாதிருப்போம்
மா கல்வி இல்லாவிடினும்
ஓயாமலே ஸ்தோத்தரிப்போம் -- செய்வோம்

5. ஏகோபித்துப் பாடுங்களேன்
மகோற்ச வானந்தத்தினால்
திரியேகரைப் போற்றுங்களேன்
கெம்பீரச் சங்கீதத்தினால் -- செய்வோம்



;