Artist: | Albums:
1. Ah, ennil nooru vayum navumIrunthal, karthar ennakuAnbaga seitha nanmai yavumAvaikalal prasangithuThuthigalode solluvenOya thoniyai paduven2. En satham vanamalavagaPoi ettavendum engirenKarthavai potra vanjaiyagaEn ratham ponga aasipenOvvoru moochum naadiyumThuthiyum pattumagavum3. Ah, ennil sombalayiradheEn ullame nandrai vizhi!Karthavai nokki oiyvilladheKaruthudan sthothari!Sthothari, en aaviyeSthothari, en thegame4. Vanathilulla patchaiyanaElla vidha ilaigaleVeliyil pookum anthamanaMalargalin eralameEnnodekuda neengalumAsainthisainthu potravum5. Karthaval jeevan petrirukumKanakilla uyirgalePaninthu potra ungalukumEnneramum adukumeThuthiyai ungal sathamumOrmith thezhumbi eravum
1. ஆ, என்னில் நூறு வாயும் நாவும்இருந்தால், கர்த்தர் எனக்குஅன்பாகச் செய்த நன்மை யாவும்அவைகளால் பிரசங்கித்துதுதிகளோடே சொல்லுவேன்ஓயா தொனியாய்ப் பாடுவேன்2. என் சத்தம் வானமளவாகபோய் எட்டவேண்டும் என்கிறேன்கர்த்தாவைப் போற்ற வாஞ்சையாகஎன் ரத்தம் பொங்க ஆசிப்பேன்ஒவ்வொரு மூச்சும் நாடியும்துதியும் பாட்டுமாகவும்3. ஆ, என்னில் சோம்பலாயிராதேஎன் உள்ளமே நன்றாய் விழி!கர்த்தாவை நோக்கி ஓய்வில்லாதேகருத்துடன் ஸ்தோத்தரி!ஸ்தோத்தரி, என் ஆவியேஸ்தோத்தரி.என் தேகமே4. வனத்திலுள்ள பச்சையானஎல்லா வித இலைகளேவெளியில் பூக்கும் அந்தமானமலர்களின் ஏராளமேஎன்னோடேகூட நீங்களும்அசைந்திசைந்து போற்றவும்5. கர்த்தாவால் ஜீவன் பெற்றிருக்கும்கணக்கில்லா உயிர்களேபணிந்து போற்ற உங்களுக்கும்எந்நேரமும் அடுக்குமேதுதியாய் உங்கள் சத்தமும்ஓர்மித் தெழும்பி ஏறவும்